Friday, August 1, 2014

மழை வருது மழை வருது ... Raja Kayya Vacha( ராஜா கைய வைச்சா )

Movie
Raja Kayya Vacha
Music
Ilaiyaraaja
Lyrics
Vaali


ஆண் : லாலால லாலால லாலா
லாலால லாலால லாலா
லாலா லாலாலலா
லல லாலா லாலலா
மழை வருது மழை வருது
குடை கொண்டுவா
மானே உன் மாராப்பிலே ஹோய்

பெண் : வெயில் வருது வெயில் வருது
நிழல் கொண்டு வா
மன்னா உன் பேரன்பிலே

ஆண் : மழை போல் நீயே
பொழிந்தாய் தேனே

பெண் : மழை வருது மழை வருது
குடை கொண்டுவா

ஆண் : மானே உன் மாராப்பிலே ஹோய்
வெயில் வருது வெயில் வருது
நிழல் கொண்டு வா

பெண் : மன்னா உன் பேரன்பிலே

ஆண் : மழை போல் நீயே
பொழிந்தாய் தேனே

பெண் : மழை வருது மழை வருது
குடை கொண்டுவா

ஆண் : மானே உன் மாராப்பிலே

***

பெண் : இரவும் இல்லை

ஆண் : பகலும் இல்லை

பெண் : இணைந்த கையில்

ஆண் : பிரிவும் இல்லை

பெண் : சுகங்கள் யாவும் அளந்து பார்போம்

ஆண் : நதிகள் மீதும் நடந்து பார்ப்போம்
நதிகள் மீதும் நடந்து பார்ப்போம்

பெண் : சுகங்கள் யாவும் அளந்து பார்ப்போம்
உனது தோளில் நான் பிள்ளை போலே
உறங்க வேண்டும் கண்ணா வா

ஆண் : மழை வருது மழை வருது
குடை கொண்டுவா
மானே உன் மாராப்பிலே ஹோய்

பெண் : வெயில் வருது வெயில் வருது
நிழல் கொண்டு வா
மன்னா உன் பேரன்பிலே

ஆண் : மழை போல் நீயே
பொழிந்தாய் தேனே

பெண் : மழை வருது மழை வருது
குடை கொண்டுவா

ஆண் : மானே உன் மாராப்பிலே ஹோய்
வெயில் வருது வெயில் வருது
நிழல் கொண்டு வா

பெண் : மன்னா உன் பேரன்பிலே

***

ஆண் : கடந்த காலம்

பெண் : மறந்து போவோம்

ஆண் : கரங்கள் சேர்த்து

பெண் : நடந்து போவோம்

ஆண் : உலகம் எங்கும் நமது ஆட்சி

பெண் : நிலமும் வானும் அதற்கு சாட்சி
நிலமும் வானும் நமது ஆட்சி

ஆண் : உலகம் எங்கும் அதற்கு சாட்சி
இளைய தென்றல் தாலாட்டு பாடும்
இனிய ராகம் கேட்கும் வா

பெண் : வெயில் வருது வெயில் வருது
நிழல் கொண்டு வா
மன்னா உன் பேரன்பிலே ஹோய்

ஆண் : மழை வருது மழை வருது
குடை கொண்டுவா
மானே உன் மாராப்பிலே
மழை போல் நீயே
பொழிந்தாய் தேனே

பெண் : மழை வருது மழை வருது
குடை கொண்டுவா

ஆண் : மானே உன் மாராப்பிலே ஹோய்
வெயில் வருது வெயில் வருது
நிழல் கொண்டு வா

பெண் : மன்னா உன் பேரன்பிலே 

சொர்க்கமே என்றாலும்.......Ooru Vittu Ooru Vanthu(ஊரு விட்டு ஊரு வந்து)

Movie
Ooru Vittu Ooru Vanthu

Music
Ilaiyaraaja


ஆண் : ஏ.. தந்தன தந்தன தந்தா..
சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா
அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா
பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா
சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா
அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா...


பெண் : ஏரிக்கரை காத்தும் ஏலேலேலோ பாட்டும்
இங்கே ஏதும் கேட்கவில்லையே

ஆண் : பாடும் குயில் சத்தம்.. ஆடும் மயில் நித்தம்
பார்க்க ஒரு சோலையில்லையே

பெண் : வெத்தலைய மடிச்சு மாமன் அதைக் கடிச்சு
துப்ப ஒரு வழியில்லையே

ஆண் : ஓடி வந்து குதிச்சு முங்கி முங்கிக் குளிச்சு
ஆட ஒரு ஓடையில்லையே

பெண் : இவ்வூரு என்ன ஊரு.. நம்மூரு ரொம்ப மேலு

ஆண் : அட ஓடும் பல காரு.. வீண் ஆடம்பரம் பாரு

பெண் : ஒரு தாகம் தீர்க்க ஏது மோரு

ஆண் : சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா
அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா

பெண் : பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா
சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா

ஆண் : அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா...

பெண் : தனதந்த தந்தன தந்தா.. தனதந்த தந்தன தந்தா..
தனதந்த தந்தன தந்தா.. தனதந்த தந்தன தந்தா..
தந்தான நா..நா தனதந்த நா..நா....


ஆண் : மாடு கண்ணு மேய்க்க.. மேயிறதப் பாக்க
மந்தைவெளி இங்கு இல்லையே

பெண் : ஆடு புலி ஆட்டம் போட்டு விளையாட
அரச மர மேடை இல்லையே

ஆண் : காளை ரெண்டு பூட்டி கட்டை வண்டி ஓட்டி
கானம் பாட வழியில்லையே

பெண் : தோழிகளை அழைச்சு சொல்லிச் சொல்லி ரசிச்சு
ஆட்டம் போட முடியலையே

ஆண் : ஒரு எந்திரத்தை போல அட இங்கே உள்ள வாழ்க்கை

பெண் : இதை எங்கே போயி சொல்ல.. மனம் இஷ்டப்படவில்லை

ஆண் : நம்மூரைப் போல ஊரும் இல்லை

பெண் : சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா

ஆண் : அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா

பெண் : பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா

ஆண் : சொர்க்கமே என்றாலும்

ஆ & பெ : அது நம்மூரைப் போல வருமா

ஆண் : அட எந்நாடு என்றாலும்

ஆ & பெ : அது நம் நாட்டுக்கீடாகுமா 

கல்யாண தேன் நிலா.... மௌனம் சம்மதம் (Mounam Sammadham)

Movie
Mounam Sammadham
Music : 
Ilayaraja
Lyrics
Vaali


ஆண் : கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா
என்னோடு வா நிலா
தேயாத வெண்ணிலா
உன் காதல் கண்ணிலா
ஆகாயம் மண்ணிலா

கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா

***

ஆண் : தென்பாண்டி கூடலா
தேவார பாடலா
தீராத ஊடலா
தேன் சிந்தும் கூடலா

பெண் : என் அன்பு காதலா
எந்நாளும் கூடலா
பேரின்பம் மெய்யிலா
நீ தீண்டும் கையிலா

ஆண் : பார்ப்போமே ஆவலா
வா வா நிலா.............

பெண் : கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா

ஆண் : நீதானே வான் நிலா
என்னோடு வா நிலா

***

பெண் : உன் தேகம் தேக்கிலா
தேன் உந்தன் வாக்கிலா
உன் பார்வை தூண்டிலா
நான் கைதி கூண்டிலா

ஆண் : சங்கீதம் பாட்டிலா
நீ பேசும் பேச்சிலா
என் ஜீவன் என்னிலா
உன் பார்வை தன்னிலா

பெண் : தேனூறும் வேர்ப்பலா
உன் சொல்லிலா..ஆ.ஆ...

ஆண் : கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா
என்னோடு வா நிலா

பெண் : தேயாத வெண்ணிலா
உன் காதல் கண்ணிலா
ஆகாயம் மண்ணிலா

ஆண் : கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா 

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்.... Marupadiyum (மறுபடியும்)

Movie
Marupadiyum
Music
Lyrics
Vaali

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளந் தென்றல் உன் மீது பண்பாடும்

இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளந் தென்றல் உன் மீது பண்பாடும்

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
ஓ ஹோ...ஹோ.. ஓ ஹொ..ஹோ...
ஓ ஹோ...ஹோ..

***

மனிதர்கள் சில நேரம் நிறம் மாறலாம்
மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்
இலக்கணம் சில நேரம் பிழையாகலாம்
எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம்

விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு
இதிலென்ன பாவம்
எதற்கிந்த சோகம் கிளியே..

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்

***

கிழக்கினில் தினம் தோன்றும் கதிரானது
மறைவதும் பின்பு உதிப்பதும் மரபானது
கடல்களில் உருவாகும் அலையானது
விழுவதும் பின்பு எழுவதும் இயல்பானது

நிலவினை நம்பி இரவுகள் இல்லை
விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை
ஒரு வாசல் மூடி..
மறுவாசல் வைப்பான் இறைவன்

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளந் தென்றல் உன் மீது பண்பாடும்

இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளந் தென்றல் உன்மீது பண்பாடும்

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள் 

சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி... thalapathy


Movie
Thalapathi
Music
Ilaiyaraja
Lyrics
Vaali



ஆண் : சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி
பெண் : என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக

ஆண் : நான் உனை நீங்க மாட்டேன் நீங்கினால் தூங்க மாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே

ஆண் : சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி

பெண் : என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக

***

ஆண்குழு : ஓ...ஓ...ஓ...ஓ... ஓ...ஓ...ஓ...ஓ...

{பெண்குழு : ஒவர்லாப் ஆ...ஆ...ஆ...ஆ....
ஓ...ஓ...ஓ...ஓ... ஓ...ஓ...ஓ...ஓ...
ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...
ஓ...ஓ...ஓ...ஓ... ஓ...ஓ...ஓ...ஓ...
ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ... ஆ...ஆ...}

பெண் : வாய் மொழிந்த வார்த்தை யாவும் காற்றில் போனால் நியாயமா
பாய் விரித்து பாவை பார்த்த காதல் இன்பம் மாயமா

ஆண் : ஆ...ஆ...வாள் பிடித்து நின்றால் கூட நெஞ்சில் உந்தன் ஊர்வலம்
போர்க்களத்தில் சாய்ந்தால் கூட ஜீவன் உன்னை சேர்ந்திடும்

பெண் : தேனிலவு நான் வாட ஏனிந்த சோதனை

ஆண் : வானிலவை நீ கேளு கூறும் என் வேதனை

பெண் : எனைத்தான் அன்பே மறந்தாயோ

ஆண் : மறப்பேன் என்றே நினைத்தாயோ

பெண் : என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக

ஆண் : சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி

ஆண் : நான் உனை நீங்க மாட்டேன் நீங்கினால் தூங்க மாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே

பெண் : என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக

***

ஆண்குழு : ஆ...ஆ...ஆ...ஆ...

{பெண்குழு: ஒவர்லாப் ஓ...ஓ...
ஆ...ஆ...ஆ...ஆ..
ஓ...ஓ... ஓ...ஓ...ஓ...ஓ...}

பெண் : சோலையிலும் முட்கள் தோன்றும் நானும் நீயும் நீங்கினால்
பாலையிலும் பூக்கள் பூக்கும் நான் உன் மார்பில் தூங்கினால்

ஆண் : ஆ...ஆ...மாதங்களும் வாரம் ஆகும் நானும் நீயும் கூடினால்
வாரங்களும் மாதமாகும் பாதை மாறி ஓடினால்

பெண் : கோடி சுகம் வாராதோ நீ எனை தீண்டினால்

ஆண் : காயங்களும் ஆறாதோ நீ எதிர் தோன்றினால்

பெண் : உடனே வந்தால் உயிர் வாழும்

ஆண் : வருவேன் அந்நாள் வரக் கூடும்

ஆண் : சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி

பெண் : என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக

ஆண் : நான் உனை நீங்க மாட்டேன் நீங்கினால் தூங்க மாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே

ஆண் : சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி

பெண் : என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக